முஸ்லிம் எம்எல்ஏவை கலாய்த்த பாஜக அமைச்சர்

By Asianet TamilFirst Published Jul 28, 2019, 12:45 AM IST
Highlights

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முஸ்லிம் எம்எல்ஏவை ஜெய் ஸ்ரீ ராம்  என கூறும்படி வற்புறுத்திய அமைச்சரின் விளையாட்டு வினையாக முடிந்தது.  அமைச்சரின் செயலுக்கு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முஸ்லிம் எம்எல்ஏவை ஜெய் ஸ்ரீ ராம்  என கூறும்படி வற்புறுத்திய அமைச்சரின் விளையாட்டு வினையாக முடிந்தது.  அமைச்சரின் செயலுக்கு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் நகர்ப்புற வளர்ச்சி, வீட்டு வசதி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.பி.சிங் நேற்று, காங்கிரசை சேர்ந்த முஸ்லிம் எம்எல்ஏ இர்பான் அன்சாரியின் தோளில் கை போட்டவாறு சிரித்தபடி சட்டப்பேரவைக்கு வெளியே வந்தார்.

அப்போது, செய்தியாளர்களை பார்த்ததும், அவர் தன்னுடன் வந்து கொண்டிருந்த அன்சாரியிடம், ‘`ஜெய் ஸ்ரீராம்' சொல்லுங்கள். நீங்களும் ராமரை சேர்ந்தவர்தான். பாபர், தைமூர், கஜினி முகமது, கோரி முகமது உங்களின் முன்னோர்கள் அல்ல,’’ என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அன்சாரி, ``ராமரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதே நீங்கள்தான். அவர் அனைவருக்கும் பொதுவானவர். நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு, சாலை வசதி, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைகள் வசதிகள் தேவை. தங்களுடைய கால்வாய்கள் சுத்தமாக்கப்பட வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பமாக உள்ளது. அயோத்தியா சென்று பாருங்கள், உங்கள் ராமரின் நிலை தெரியவரும்,'' என்று கடுகடுப்புடன் பதிலளித்தார்.

அமைச்சரின் விளையாட்டு வினையாக முடிந்ததால், எம்எல்ஏ.வும் அமைச்சரும் தாங்கள் வந்த ஒரே பாதையில் இருந்து விலகி வெவ்வேறு பாதைகள் வழியாக சட்டப்பேரவையை விட்டு வெளியேறினர். இந்நிலையில், பாஜ அமைச்சரின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைமை கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஜார்க்கண்டில் முஸ்லிம் இளைஞர் தப்ரீஸ் அன்சாரி பைக் திருடியதான குற்றச்சாட்டில் கிராம மக்களால் கம்பம் ஒன்றில் கட்டி வைக்கப்பட்டு பல மணி நேரம் தாக்கப்பட்டார். அவரை ‘ஜெய் ஸ்ரீ ராம்' `ஜெய் அனுமான்' என்று கோஷமிடச் சொல்லி தாக்கியதில், சில நாட்களுக்கு பின்னர் அன்சாரி உயிரிழந்தார். இந்த தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டித்தார். இந்நியைில், ஜார்க்கண்ட் அமைச்சரின் இந்த பேச்சு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!