சென்னை தலைமைச் செயலகம் அருகே உள்ள இந்தியன் வங்கி அருகே நின்று கொண்டிருந்த கார்த்திக் என்பவரிடம் அவ்வழியாக வந்த இரண்டு இளைஞர்கள் செல்போனை பறித்து விட்டு ராஜாஜி சாலையிலிருந்து போர் நினைவு சின்னம் வலது புறம் திரும்பி கொடிமர சாலையில் அதிவேகமாக சென்றுள்ளனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் முத்துசாமி பாலத்திற்கு சில மீட்டர் தூரம் முன்பாக சுற்று சுவரில் மோதி பல மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் பைக்கிச் வேகமாக தப்பிச்சென்றபோது விபத்தில் சிக்கி பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.
செல்போன் பறிப்பு
சென்னை தலைமைச் செயலகம் அருகே உள்ள இந்தியன் வங்கி அருகே நின்று கொண்டிருந்த கார்த்திக் என்பவரிடம் அவ்வழியாக வந்த இரண்டு இளைஞர்கள் செல்போனை பறித்து விட்டு ராஜாஜி சாலையிலிருந்து போர் நினைவு சின்னம் வலது புறம் திரும்பி கொடிமர சாலையில் அதிவேகமாக சென்றுள்ளனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் முத்துசாமி பாலத்திற்கு சில மீட்டர் தூரம் முன்பாக சுற்று சுவரில் மோதி பல மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
undefined
விபத்து
விபத்தில் தலை சிதைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இருவரையும் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் மீட்டு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதித்தனர். அளவுக்கதிகமான குடிபோதையில் இருந்த இருவரையும் மருத்துவர்கள் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து சிகிச்சையளித்து வந்தனர்.
இளைஞர்கள் பலி
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இரண்டு இளைஞர்களும் இன்று பரிதாபமாக உயிரிழந்தனர். வழக்கு பதிவு செய்த கொத்தவால்சாவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் இறந்த இருவரும் திருட்டு இருசக்கர வாகனத்தில் சென்று மொபைல் பறிப்பில் ஈடுப்பட்டது தெரியவந்தது.