அட கடவுளே.. சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ்க்கு வந்த சோதனை பார்த்தீங்களா?

By vinoth kumar  |  First Published May 7, 2022, 2:31 PM IST

சென்னை தியாகராய நகரில் செயல்படும் சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் மற்றும் அதன் பங்குதாரர்களான சுஜாதா, ஒய்.பி.ஸ்ரவன் உள்ளிட்டோர் மீது  கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி இந்தியன் வங்கியில் தலைமை நிர்வாகி கே.எல் குப்தா சிபிஐ-யில் புகார் அளித்தார். 


வங்கி மோசடி விவகாரத்தில் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

சென்னை தியாகராய நகரில் செயல்படும் சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் மற்றும் அதன் பங்குதாரர்களான சுஜாதா, ஒய்.பி.ஸ்ரவன் உள்ளிட்டோர் மீது  கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி இந்தியன் வங்கியில் தலைமை நிர்வாகி கே.எல் குப்தா சிபிஐ-யில் புகார் அளித்தார். அந்த புகாரில் கடந்த 2017-ம் ஆண்டு தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர் கோல்டு பேலஸ் மற்றும் அதன் பங்குதாரர்கள் சுஜாதா, ஒய்.பி.ஸ்ரவன் ஆகியோர் கமர்சியல் ஷோரூம் வாங்குவதற்காக 150 கோடி ரூபாய் கடன் பெற்றதாகவும், அதே ஆண்டில் மேலும் 90 கோடி ரூபாய் கடன் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார். 

Tap to resize

Latest Videos

இந்த கடன் தொடர்பான சொத்துகளை வங்கிக்கு தெரியாமல் மாற்றியதும், இரண்டாவதாக பெற்ற 90 கோடி ரூபாய் கடன் மூலம், கமர்சியல் ஷோரூம் வாங்குவதற்காக பெற்ற கடனை அடைக்க முயற்சி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு விதிமுறைகள் மீறி ஈடுபட்டதும் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

undefined

இதன் மூலம் இந்தியன் வங்கிக்கு 312 கோடி ரூபாய் அளவில் இழப்பு ஏற்படுத்தும் வகையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கே.எல்.குப்தா குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், வங்கியில் கடன் பெற்று மோசடி செய்ததாக சரவணா ஸ்டோர் கோல்ட் பேலஸ் மற்றும் பங்குதாரர்கள் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக வங்கியின் தலைமை மேலாளர் செல்வம் மற்றும் துணை பொதுமேலாளர் தமிழரசு ஆகியோர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

click me!