இரும்பு ராடால் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல்.. குண்டரை ஏவியதாக பாஜக நிர்வாகி மீது புகார்

Published : Apr 16, 2022, 11:46 AM IST
இரும்பு ராடால் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல்.. குண்டரை ஏவியதாக பாஜக நிர்வாகி மீது புகார்

சுருக்கம்

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (70) இவர், கொரட்டூரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில், சூப்பர் மார்க்கெட் எதிரே உள்ள இவரது இடத்தில் 2018ம் ஆண்டு முதல் பாஜக பிரமுகர் ஜெகதீஷ் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். 

சென்னை முன்விரோதம் காரணமாக குண்டரை ஏவி சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை தாக்கியதாக பாஜக நிர்வாகி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல்

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (70) இவர், கொரட்டூரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்நிலையில், சூப்பர் மார்க்கெட் எதிரே உள்ள இவரது இடத்தில் 2018ம் ஆண்டு முதல் பாஜக பிரமுகர் ஜெகதீஷ் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் டீக்கடையை காலி செய்யும்படி ஜெகதீஷிடம் கந்தசாமி கூறியுள்ளார். அதற்கு ஜெகதீஷ் 3 மாதம் அவகாசம் வேண்டும் என கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் கந்தசாமி புகார் அளித்துளார். 

சிசிடிவி காட்சிகள்

இந்நிலையில் நேற்று இரவு சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த மர்ம நபர் வாடிக்கையாளர் போல வந்து பொருட்கள் வாங்குவது போல் நடித்து கந்தசாமியின் மனைவியிடம் பொருட்கள் வேண்டும் என கேட்டுள்ளார். அந்த பொருட்களை அவர் எடுக்கச் சென்றார். அப்போது அந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடால் கந்தசாமியின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார்.  

காவல் நிலையத்தில் புகார்

இதில், படுகாயமடைந்து கந்தசாமி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இவை அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!