தலைநகர் டெல்லியை விஞ்சியிருந்த சென்னையின் காற்று மாசு..! தற்போதைய நிலை என்ன தெரியுமா..?

By Manikandan S R SFirst Published Nov 12, 2019, 4:45 PM IST
Highlights

சென்னையில் கடந்த சில நாட்களாக உயர்ந்திருந்த காற்றுமாசு தற்போது வெகுவாக குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகம் காணப்பட்டது. சென்னையின் மணலி, கொடுங்கையூர், வேளச்சேரி, ஆலந்தூர் போன்ற இடங்களில் 200 ஆக காற்று மாசு இருந்தது. தலைநகர் டெல்லியை விட அதிக காற்று மாசுவால் சென்னை பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இந்த நிலையில் சென்னையில் இன்று காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காற்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் காற்று மாசு தரக்குறியீடு எண் மணலியில் 85 ஆகவும், அண்ணாநகரில் 95 ஆகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஆலந்தூரில் 90 ஆகவும், வேளச்சேரியில் 78 ஆகவும் இன்னும் பல இடங்களில் 100 கீழாக காற்று மாசு குறைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு 50 க்கும் கீழ் இருந்தால் மட்டுமே அது சுவாசிக்க ஏற்றத்தக்கது இல்லை என்று கருதப்படும். இந்தநிலையில் சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு தற்போது இயல்பு நிலையை எட்டியிருக்கிறது.

click me!