மக்களே உஷார்... சென்னைக்கு காத்திருக்கும் பயங்கர ஆபத்து..!! என்னவென்று தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள்..!!!

By Ezhilarasan BabuFirst Published Nov 8, 2019, 11:22 AM IST
Highlights

அதாவது டெல்லி மற்றும் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தை நோக்கி காற்று வரும்போது,  அது சென்னையில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று  தெரிவித்திருந்தார்.  தற்போது அதே நிலை  இங்கு உருவாகியுள்ளது. இதனால்  சென்னையில் மூச்சுத் திணறல் மற்றும், சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மக்கள் ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
 

விரைவில் சென்னை காற்று மாசுபாட்டால்  பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.  மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவல்களும் இதை உறுதிசெய்துள்ளது.  எப்போதும் இல்லாத அளவிற்கு காற்று மாசுபாட்டால் நாட்டின் தலைநகர் டெல்லி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் காற்று மாசுபாட்டில் டெல்லி போலவே சென்னையும் மிக மோசமான நிலையை எட்டும் நிலை உருவாகியுள்ளது.  விரைவில் டெல்லியை சென்னை மிஞ்சும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.   சென்னையில் காற்று மாசு குறியீடு 224 புள்ளிகளாக பதிவாகின்றன.  அதன்படி சராசரி காற்று மாசுபாட்டில் டெல்லியை விட சென்னை மிஞ்சம் நிலை உருவாகியுள்ளது.  ஏற்கனவே வெதர்மேன் சென்னை காற்று மாசு குறித்து எச்சரிக்கை கொடுத்திருந்தார்.  அதாவது டெல்லி மற்றும் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தை நோக்கி காற்று வரும்போது,  அது சென்னையில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று  தெரிவித்திருந்தார்.  தற்போது அதே நிலை  இங்கு உருவாகியுள்ளது. இதனால்  சென்னையில் மூச்சுத் திணறல் மற்றும்,  சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மக்கள் ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதை போர்க்கால அடிப்படையில் தடுக்கவும் ,மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு தயாராக வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.  தொடர்ந்து அதிகரித்து வரும் வாகனம் பெருக்கம். மொத்தம் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மண்டலம், தேவையற்ற தீ  விபத்துக்கள் போன்றவற்றால்,  காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,  மக்கள் வாழ தகுதி இல்லாத நகரங்களில் ஒன்றாக கொஞ்சம் கொஞ்சமாக டெல்லி மாறிவரும் நிலையில் அதற்கு இரண்டாம் நிலையில் சென்னை வந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

click me!