உடல்களை புதைக்க விடாத கீழ்த்தரமான மக்கள்... தடுக்காத ஈனப்பிறவிகள்... கோபத்தில் கொந்தளித்த நடிகர் ராஜ்கிரண்!

By Asianet TamilFirst Published Apr 22, 2020, 8:46 AM IST
Highlights

“எவ்வளவு கீழ்த்தரமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும்பொழுது, மிகுந்த வேதனையும் மன உளைச்சலும் ஏற்படுகிறது. தம் மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர் யாரைப் பற்றியும் கவலைப்படாமல், "தான் படித்தது மக்களை காப்பாற்றுவதற்கே" என்ற ஒரே லட்சியத்தோடு, சமூகப் பொறுப்புணர்வோடு, தம் உயிரையும் பணயம் வைக்கும் புனிதமான மருத்துவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு இதுதானா?"
 

கொரோனாவால் இறந்த மருத்துவர், இஸ்லாமிய சிறுவன் ஆகியோரின் உடல்களை புதைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் கொடுமைகளுக்கு கடுமையான எதிர் நடவடிக்கைகள் எடுக்காத ஆட்சியாளார்கள், மிகவும் ஈனப்பிறவிகளாக கருதப்படுவர் என்று நடிகர் ராஜ்கிரண் காட்டமாக சாடியுள்ளார்.


சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்த லட்சுமி நாராயணன், சைமன் ஹெர்குலிஸ் ஆகிய இரு மருத்துவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக மருத்துவர் சைமன் ஹெர்குலிஸை அடக்கம் செய்ய முயன்றபோது பொதுமக்கள் நடத்திய தாக்குதல் பலரையும் ஆத்திரத்தில் தள்ளியுள்ளது. இதுதொடர்பாக அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். இந்த வரிசையில் நடிகர் ராஜ்கிரணும் இணைந்துள்ளார்.


இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களைக் கடுமையாகக் கண்டித்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “எவ்வளவு கீழ்த்தரமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும்பொழுது, மிகுந்த வேதனையும் மன உளைச்சலும் ஏற்படுகிறது. தம் மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர் யாரைப் பற்றியும் கவலைப்படாமல், "தான் படித்தது மக்களை காப்பாற்றுவதற்கே" என்ற ஒரே லட்சியத்தோடு, சமூகப் பொறுப்புணர்வோடு, தம் உயிரையும் பணயம் வைக்கும் புனிதமான மருத்துவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு இதுதானா?

இஸ்லாமியனாக பிறந்த ஒரே காரணத்தால், வெறும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்த ஒரு மாற்றுத்திறனாளி சிறுவனின் உடலை, புதைக்க விடமாட்டோம் என்று அடாவடி பண்ணிய அரசியல் கட்சிகள் வைத்ததுதான், இந்த நாட்டில் சட்டம், என்றால், உலக நாடுகளின் பார்வையில், நம் நாடும், தேசமும் மிகக்கேவலப்பட்டு நிற்கும். இதைப்போன்ற கொடுமைகளுக்கு கடுமையான எதிர் நடவடிக்கைகள் எடுக்காத ஆட்சியாளார்கள், மிகவும் ஈனப்பிறவிகளாக கருதப்படுவர்.” என்று காட்டமாக நடிகர் ராஜ்கிரண் பதிவிட்டுள்ளார்.
 

click me!