மகளால் சிக்கலில் மாட்டிய சூப்பர் ஸ்டார்... உதயநிதியை அடுத்து ரஜினியை கரம் வைக்கும் சென்னை மாநகராட்சி..!

Published : Jul 22, 2020, 02:02 PM IST
மகளால் சிக்கலில் மாட்டிய சூப்பர் ஸ்டார்... உதயநிதியை அடுத்து ரஜினியை கரம் வைக்கும் சென்னை மாநகராட்சி..!

சுருக்கம்

கேளம்பாக்கம் செல்ல ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினாரா என்பதை ஆய்வு செய்துதான் கூற முடியும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். 

கேளம்பாக்கம் செல்ல ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கினாரா என்பதை ஆய்வு செய்துதான் கூற முடியும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். 

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், இ-பாஸ் வாங்கினால் மட்டுமே ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல முடியும் என்ற நடைமுறை தமிழகத்தில் உள்ளது. இ-பாஸ்க்கு விண்ணப்பித்தாலும் பாஸ் கிடைப்பதில்லை என பலர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தினசரி 12 ஆயிரம் பேருக்கு குறையாமல் சோதனை நடத்தப்படுகிறது. ஆயிரம் பேருக்கு பாசிட்டிவ் வந்தால் 10,000 பேருக்கு சோதனைகளை நடத்த வேண்டும் என்பது விதியாகும். இதுவரை 5.70 லட்சம் பேருக்கு சோதனை செய்துள்ளோம். இன்னும் 10-15 நாட்களில் சென்னையின் 10 சதவீத மக்கள் தொகை அளவான 8 லட்சம் பேருக்கு சோதனையை நடத்திவிடுவோம். சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே பாசிட்டிவை குறைக்க முடியும். சென்னைக்கு வர விரும்பும் நபர்கள் முறையான ஆவணங்களுடன் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம். 

மேலும், சென்னைக்கு வர வேண்டும் என விரும்பும் நபர்கள் முறையாக இ-பாஸை ஆவணங்கள் உடன் பதிவு செய்யலாம். ரஜினிகாந்த் இ-பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் சென்றாரா என்பதை ஆய்வு செய்தே கூற முடியும். மீண்டும் கேளம்பாக்கத்தில் இருந்து சென்னை வருவதற்கும் ரஜினி இ-பாஸ் வாங்கினாரா என்பதும் ஆய்வு செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

காலையிலேயே இல்லத்தரசிகள் அதிர்ச்சி! திடீரென 5000 உயர்வு! ரூ.3 லட்சத்தை நோக்கி வெள்ளி! அப்படினா தங்கம் விலை?
அதிகாலையில் அலறிய சென்னை! சினிமாவை மிஞ்சிய பயங்கரம்.! கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி கொ**லை