சேதமடைந்த மின் கம்பங்களால் விபத்து அபாயம்… - கண்டு கொள்ளாத மின்வாரிய துறை

By Asianet TamilFirst Published Aug 6, 2019, 12:47 AM IST
Highlights

அம்பத்தூர் மின்வாரிய கோட்டத்தில் மின்கம்பங்கள் பல இடங்களில் சேதமடைந்த நிலையில் உள்ளதால், சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

அம்பத்தூர் மின்வாரிய கோட்டத்தில் மின்கம்பங்கள் பல இடங்களில் சேதமடைந்த நிலையில் உள்ளதால், சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

அம்பத்தூர் மின்வாரிய கோட்டத்தில் அம்பத்தூர், ஒரகடம், கள்ளிக்குப்பம், மேனாம்பேடு, அம்பத்தூர் தொழிற்பேட்டை, மண்ணூர்பேட்டை, அயப்பாக்கம், அயனம்பாக்கம், கொரட்டூர், பாடி, ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

இந்த பகுதியில் சுமார் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகளுக்கு மின்கம்பங்கள் வழியாக துணை மின் நிலையங்களில் இருந்து மின்சப்ளை செய்யப்படுகிறது. ஆரம்ப காலங்களில் இரும்பு கம்பங்கள் வழியாக மின் விநியோகம் செய்யப்பட்டது. பின்னர், இந்த கம்பங்கள் அடிப்பகுதி துருப்பிடித்து கீழே விழும் நிலை ஏற்பட்டது.

மேலும், மழைக்காலங்களில் இரும்பு கம்பங்களில் மின்கசிவு ஏற்பட்டு கால்நடை, மனித உயிர்பலி சம்பவங்கள் நடைபெற்றது.

இதனையடுத்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலான இரும்பு மின் கம்பங்கள் சிமென்ட் கம்பங்களாக மாற்றப்பட்டது. தற்போது இந்த கம்பங்கள் பல இடங்களிலும் சிமென்ட் பூச்சு பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதன் காரணமாக பலத்த காற்று அடித்தால் மின் கம்பங்கள் கீழே விழும் அபாயம் உள்ளது.

எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட மின் வாரிய உயர் அதிகாரிகள் அம்பத்தூர் கோட்டத்தில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றவும், கோப்பிங் திட்டத்தை முறையாக செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

click me!