கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டுத் திடலில் புதிதாக அமைக்கப்படவுள்ளது குத்துச்சண்டை மைதானம்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் 222 விளையாட்டுத் திடல்கள் மற்றும் பூங்காக்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது. கோபாலபுரத்தில் உள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடல் மேம்படுத்துவது குறித்து மேயா் பிரியா ஆய்வு செய்தாா். இந்த விளையாட்டுத் திடல் 17, 658 ச. மீ. பரப்பளவு கொண்டது ஆகும்.
இதில் சுமார் 6,187 ச. மீ. பரப்பளவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் குத்துச்சண்டை மைதானம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 11, 470 ச. மீ. பரப்பளவில் நடை பாதை, கழிப்பறை மற்றும் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட உள்ளது என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க..வெப்பத்தை போக்க வருகிறார் வருண பகவான்.! தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை - எங்கெல்லாம் தெரியுமா?
undefined
பழுதடைந்த உடற்பயிற்சிக் கூடக் கட்டடத்தை உடனடியாக அப்புறப்படுத்திவிட்டு, புதிய உடற்பயிற்சிக் கூடம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும்படி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா் சென்னை மேயா் ஆா்.பிரியா. கோபாலபுரத்தில் குத்துச்சண்டை மைதானம் அமைவது, அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..2000 ரூபாய் நோட்டு: சீறிய முதல்வர் ஸ்டாலின்.! திமுகவினரின் சாராய ஆலை விவகாரத்தை தூசி தட்டும் அண்ணாமலை