தமிழ்நாட்டில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 7758 பேர் டிஸ்சார்ஜ்

By karthikeyan VFirst Published Jul 25, 2020, 6:13 PM IST
Highlights

தமிழ்நாட்டில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 6988 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 2,06,737ஆக அதிகரித்துள்ளது. 
 

தமிழ்நாட்டில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 6988 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 2,06,737ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முனைப்பில் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு குறைந்துவரும் 21 மாவட்டங்களில் குழு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

அந்தவகையில், இன்று 64315 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் புதிதாக 6988 பேருக்கு கொரோனா தொற்று உறுதியனாது. எனவே தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,07,737ஆக அதிகரித்துள்ளது. பரிசோதனைகள் அதிகமாக மேற்கொள்ளப்படுவதால் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. அதனால் தான் கடந்த சில தினங்களாக அதிகமான பாதிப்பு பதிவாகிறது.

இன்று சென்னையில் 1329 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 93537ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரமாக சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துவருகிறது. கொரோனா தீவிரம் அதிகமாக இருக்கும் பகுதிகளை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்காகத்தான் குழு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். அந்தவகையில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 7758 பேர் டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து, கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,51,055ஆக அதிகரித்துள்ளது. 

நேற்று 88 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 89 பேர் உயிரிழந்திருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை 3409ஆக அதிகரித்துள்ளது. 
 

click me!