சென்னைவாசிகளே உஷார்.! இனி பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் 50 ரூபாய் அபராதம் - அதிரடி உத்தரவு.!!

By Raghupati R  |  First Published Feb 10, 2023, 2:52 PM IST

இனி பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்ற உத்தரவு வெளியாகி உள்ளது.


நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர், இந்தியாவை தூய்மைப்படுத்தும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதற்காக தூய்மை இந்தியா திட்டத்தை கொண்டு வந்தார்.

ஆனால் இந்தத் திட்டம் இன்னும் நகரங்களில் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்ற விமர்சனம் இன்றளவும் உள்ளது. பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதால் பல தொற்று நோய்கள், சுகாதார நீர்கேடுகள் உண்டாகிறது. இதனால், மக்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

Tap to resize

Latest Videos

கொரொனா தொற்று உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவி வரும் இக்காலக்கட்டத்தில்  மக்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாநகராட்சி சட்டப்படி பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களிடம் 50 ரூபாய் அபராதமாக வசூலிக்க முடியும். இதனை மாநகராட்சி அதிகாரிகள் முழுமையாக அமல்படுத்த முடிவு செய்துள்ளனர்.

undefined

இதையும் படிங்க..ரெட் ஜெயண்ட்.! 100 கோடி பட்ஜெட்! திடீரென திமுக பக்கம் ரூட்டை மாற்றிய காயத்ரி ரகுராம் - நம்ம லிஸ்ட்லயே இல்லையே

பொது இடங்களில் மக்கள் சிறுநீர் கழிப்பதை தவிர்ப்பதற்காகவே சென்னை மாநகரில் பல இடங்களில் பொது கழிப்பிடங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் பலர் அதனை முறையாக கடைபிடிப்பதில்லை. விதியை மீறி சிறுநீர் கழிப்பவர்களிடம் 50 ரூபாய் அபராதமாக வசூலிக்க முடிவு செய்துள்ள மாநகராட்சி அதிகாரிகள் களத்தில் குதித்துள்ளனர்.

இதற்கான உத்தரவை கமிஷனர் ககன்தீப்சிங் பேடி பிறப்பித்துள்ளார். இதுபற்றி கூடிய அவர், பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களுக்கான அபராத தொகை ரூ.50 என்பது குறைவானதாகவே இருந்த போதிலும் அதனை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தினால் நிச்சயம் பொது இடங்களில் சுகாதாரத்தை பேண முடியும் என்று கூறினார்.

சென்னை மாநகராட்சி சட்டம் 1919-ன் படி பொதுஇடங்களில் சிறுநீர் கழிப்பவர்களிடம் அபராதம் வசூலிக்க சட்டத்தில் இடமிருந்த போதிலும் அதனை மாநகராட்சி அதிகாரிகள் அமல்படுத்தாமல் இருந்து வந்தனர். தற்போது சென்னை மாநகரின் சுகாதாரத்தை பேணும் வகையில் சிறுநீர் கழிப்பவர்களிடம் ரூ.50 அபராத தொகையை கண்டிப்புடன் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த திட்டத்துக்கு வரவேற்ப்பை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க..ஒரு நாளைக்கு 4 கொலை!.. கஞ்சா விற்பனை அமோகம்! முதல்வருக்கு இது தெரியாது - திமுகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

click me!