தாம்பரத்தில் சாலையை கடந்தவர்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்து; 5 பேர் படுகாயம்

By Velmurugan s  |  First Published Apr 24, 2023, 11:47 AM IST

தாம்பரத்தில் சாலையை கடக்க முயன்ற நபர்கள் மீது அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.


சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று இரவு பயணிகளை ஏற்றுக்கொண்டு அரசு விரைவு பேருந்து பழனிக்கு செல்வதற்காக புறப்பட்டு வந்தது. தாம்பரம் மதுரவாயில் பைபாஸ் சாலை வழியாக வந்து தாம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி செல்வதற்காக ஜிஎஸ்டி சாலையில் சிக்னல் அருகே வரும்பொழுது சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனங்கள் மீது அரசு விரைவு பேருந்து மோதியது. 

இந்த விபத்தில் 3 இருசக்கர வாகனங்களில் வந்த கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் (வயது 50), புவனேஸ்வரி (48), பாலச்சந்திரன் (40), லட்சுமி (64), மணி (68) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் சிலர் கால் முறிவு, தலைக்காயம் போன்றவை ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

Tap to resize

Latest Videos

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் படுகொலை; மனைவி, கள்ளக்காதலன் கைது

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்து ஓட்டுநரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக விபத்து ஏற்படுத்திய அரசு விரைவு பேருந்து, சேதமடைந்த இருசக்கர வாகனங்கள் சாலையில் நின்றதால் பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் வரும் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

undefined

ஆசை வார்த்தை கூறி மருத்துவரிடம் ரூ.34 லட்சம் ஏமாற்றிய அமெரிக்க பெண்? சைபர் கிரைம் போலீசார் வழக்கு

தாம்பரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் காவல் துறையினர் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி அரசு விரைவு பேருந்தை  சாலை ஓரம் கொண்டு சென்று நிறுத்தினர். இதன் பிறகு போக்குவரத்து சீரானது. விபத்தில் சிக்கிய விரைவு பேருந்தில் வந்த பயணிகள் மாற்று பேருந்து மூலம் பழனி செல்ல போக்குவரத்து அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய் பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!