தமிழ்நாட்டில் இன்று மேலும் 4985 பேருக்கு கொரோனா..! இன்று 70 பேர் உயிரிழப்பு

Published : Jul 20, 2020, 06:20 PM IST
தமிழ்நாட்டில் இன்று மேலும் 4985 பேருக்கு கொரோனா..! இன்று 70 பேர் உயிரிழப்பு

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று மேலும் 4985 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 175678ஆக அதிகரித்துள்ளது.  

தமிழ்நாட்டில் இன்று மேலும் 4985 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 175678ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சீரான வேகத்தில் உயர்ந்துவருகிறது. தினமும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு உறுதியாகிவருகிறது. இன்று 52087 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 4985 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. எனவே மொத்த பாதிப்பு எண்ணிக்கை 175678ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் இன்று 1298 பேருக்கு தொற்று உறுதியானதால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 87235ஆக அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாகவே சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில், மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். அதிகமானோர் குணமடைவது ஆறுதலளிக்கும் விஷயமாக உள்ளது. இன்று 3861 பேர் இன்று டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கை 121776ஆக அதிகரித்துள்ளது. 

இன்று தமிழ்நாட்டில் 70 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 2551ஆக அதிகரித்துள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!