தமிழ்நாட்டில் இன்று மேலும் 4328 பேருக்கு தொற்று..! 2 ஆயிரத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு

Published : Jul 13, 2020, 06:22 PM IST
தமிழ்நாட்டில் இன்று மேலும் 4328 பேருக்கு தொற்று..! 2 ஆயிரத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று மேலும் 4328 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,42,798ஆக அதிகரித்துள்ளது.   

தமிழ்நாட்டில் இன்று மேலும் 4328 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,42,798ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

சென்னையில் அதிகமாகவும் மற்ற மாவட்டங்களில் குறைவாகவும் கொரோனா பாதிப்பு இருந்த நிலை, தற்போது தலைகீழாக மாறியுள்ளது. சென்னையில் கடந்த ஒருவாரமாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 44560 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், மேலும் 4328 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 1,42,798ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 1140 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 78,573ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தினமும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.  

கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்து வருகின்றனர். இது ஒன்றுதான் ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. இன்று 3035 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 92567ஆக அதிகரித்துள்ளது. இன்று 66 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு என்ணிக்கை 2032ஆக அதிகரித்துள்ளது

PREV
click me!

Recommended Stories

Chennai Power Cut: மே 24ம் தேதி.. ஞாயிற்றுக்கிழமை அதுவுமா சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
TVK Supporter Arrested: சென்னையில் அதிர்ச்சி! வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளரை தட்டி தூக்கிய போலீஸ்! சிக்கியது எப்படி?