தமிழ்நாட்டில் பெரும் சோகம்: இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இரண்டுமே உச்சம்..!

Published : Jun 21, 2020, 06:24 PM IST
தமிழ்நாட்டில் பெரும் சோகம்: இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு இரண்டுமே உச்சம்..!

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 2532 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59377ஆக அதிகரித்துள்ளது.   

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த, அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ள நிலையில், கடந்த சில தினங்களாக தமிழக அரசு கொரோனா பரிசோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக  33231 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், இன்று பரிசோதனை எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது. இன்று 31,401 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 2592 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைவிட இன்றைக்கு குறைவான பரிசோதனைகளே செய்யப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பு மட்டும் அதிகரித்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59377ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் இன்று ஒரே நாலில் 1493 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 41172ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருவது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1432 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 32254ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 53 பேர் உயிரிழப்பு பதிவானதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 757ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பது வருத்தமளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

ரூ.18,500 முதல் 58,600 வரை சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி? சென்னை தியாகராஜர் கோவிலில் வேலை!
தங்கத்துடன் போட்டி போடும் வெள்ளி.! இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்!