பிளஸ் 2 தேர்வில் அசால்ட் சாதனை பண்ணி அசத்திய மாற்று திறனாளிகள் மாணவர்கள்... குவியும் வாழ்த்துக்கள்!

By sathish kFirst Published Apr 19, 2019, 11:56 AM IST
Highlights

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய  2697 மாற்றுத்திறனாளிகளில், 2404 தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய  2697 மாற்றுத்திறனாளிகளில், 2404 தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வினை 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதினர். 

தமிழகத்தில் மொத்தம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் தமிழகம் மற்றும் புதுவை சேர்த்து மொத்தம் 2697 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.  விழிமாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் இந்த தேர்வை எழுதினார்கள். 

இந்நிலையில் இன்று வெளியான, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவில் மொத்த தேர்ச்சி விகிதம்- 91.03% மாணவிகள் தேர்ச்சி- 93.64% மாணவர்கள் தேர்ச்சி- 88.57%, வழக்கம் போல மாணவர்களைவிட மாணவிகள் 5.07% அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  

இதில் மொத்தம் 2404 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். மாற்று திறனாளிகள் எல்லோரும் தேர்வெழுதி அதில் அதிக மதிப்பெண்ணும் எடுத்து சாதித்திருக்கும் அவர்களுக்கு வாழ்த்து குவிகிறது.

click me!