கொரோனாவின் கோரப்பிடியில் தமிழகம்... சிக்கி சின்னாபின்னமாகும் உயிர்கள்... பாதிப்பு 3வது நாளாக 2000ஐ கடந்தது..!

By vinoth kumarFirst Published Jun 19, 2020, 7:02 PM IST
Highlights

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3வது முறையாக 2000ஐ கடந்துள்ளது. இதனையடுத்து, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 54,449ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3வது முறையாக 2000ஐ கடந்துள்ளது. இதனையடுத்து, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 54,449ஆக உயர்ந்துள்ளது. 

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழகத்தில் 3வது முறையாக கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்றும் மட்டும் 2,115 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,449ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னையில் கொரோனா பாதிப்பு 1,322 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 38,327ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,635 அடுத்து மொத்தம் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 30,276ஆக உயர்ந்துள்ளது. ஆறுதல் செய்தியாக உள்ளது. 

அதேவேளையில், தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 41 உயிரிழந்ததையடுத்து மொத்தம் பலி எண்ணிக்கை 666ஆக உயர்ந்துள்ளது. இன்றைய உயிரிழப்புகளில் 26 பேர் அரசு மருத்துவமனையிலும், 15 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும் உயிரிழப்பும் அதிகரித்து வருவது பொதுமக்களின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று அரசு பரிசோதனை மையங்கள், தனியார் பரிசோதனை மையங்கள் என மொத்தம் 81 ஆய்வகங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 8,00,443 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 25,902 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!