சென்னையில் பகீர் சம்பவம்... 14 வயது சிறுமியை திருமணம் செய்யமுயன்ற வாலிபர்.. போலீசை கண்டதும் தப்பியோட்டம்..!

Published : Jul 06, 2021, 06:23 PM ISTUpdated : Jul 06, 2021, 06:27 PM IST
சென்னையில் பகீர் சம்பவம்... 14 வயது சிறுமியை திருமணம் செய்யமுயன்ற வாலிபர்.. போலீசை கண்டதும் தப்பியோட்டம்..!

சுருக்கம்

சென்னையில் 14 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

சென்னையில் 14 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

சென்னையில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு இலவச தொலைபேசி நம்பருக்கு நேற்று முன்தினம் ஒருவர் பேசினார். அப்போது, அந்த நபர் சென்னை பெரம்பூர் திருவிகநகர் தெருவில் 14 வயது சிறுமிக்கு ரகசியமாக திருமணம் நடக்க உள்ளது. அந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். 

இதன் அடிப்படையில் பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல்கொடுக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இப்போது, ஒரு வீட்டில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அங்கு மணக்கோலத்தில் சிறுமியை அமர வைத்திருந்தனர். சிறுமியிடம் விசாரித்தபோது திருமணத்தில் விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார். 

இதன் அடிப்படையில் சிறுமிக்கு திருமண வயது ஆகவில்லை என்பதாலும் அந்த சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது திருவிகநகர் தீட்டி தோட்டம் பகுதியை சேர்ந்த அயூப்(23) என்பவருக்கு அந்த சிறுமியை திருமணம் செய்து வைக்க இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, தலைமறைவாக உள்ள அயூப்பை போலீசார் தேடி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை
குட்நியூஸ்.. சென்னை மாநகரப் பேருந்து பாஸ் கட்டணம் அதிரடி குறைப்பு.. எப்படி பெறுவது?