கட்டிட தொழிலாளி கொலையில் 2 பேர் கைது

By Asianet TamilFirst Published Jul 30, 2019, 1:11 PM IST
Highlights

ஆவடி அருகே கோயில்பதாகை நள்ளிரவில் வீடு புகுந்து கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொன்றதாக கைதான இரு வாலிபர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவடி அருகே கோயில்பதாகை நள்ளிரவில் வீடு புகுந்து கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொன்றதாக கைதான இரு வாலிபர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாகியுள்ள முக்கிய குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவடி அருகே கோயில்பதாகை, வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (26).கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது பெற்றோர் சிறு வயதில் இறந்து விட்டதால் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 26ந்தேதி இரவு அசோக்குமார் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 12மணி அளவில் இவரது வீட்டு கதவை சிலர் தட்டி உள்ளனர். அப்போது வெளியே வந்த அசோக்குமாரை 3பேர் கொண்ட கும்பல் சரமாரியாக உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் தாக்கி கொலை செய்தனர்.

இது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், ஆவடி, கோயில் பதாகை, கலைஞர் நகர், மசூதி பின்புறத்தை சார்ந்த விஜய் (24) என்பவருக்கும், அசோக் குமாருக்கும் இடையே குடிபோதையில் கடந்த 10நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.

 அதில், அவரை, விஜய், தனது நண்பர்களுடன் சேர்ந்து அடித்துள்ளனர். பின்னர், பதிலுக்கு அசோக்குமாரும் நண்பருடன் சேர்ந்து விஜய் மற்றும் கூட்டாளிகளை தாக்கியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அசோக்குமாரை வீடு புகுந்து விஜய், அவரது நண்பர்களான பிரபு, மனோஜ் ஆகியோர் சேர்ந்து கற்களாலும், உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் தலைமறைவாக இருந்த ஆவடி, பூம்பொழில் நகர், சூரியகாந்தி தெருவை சேர்ந்த பிரபு (23), கோயில்பதாகை, சுவாமி பிள்ளை தெருவை சேர்ந்த மனோஜ் (23)ஆகிய இருவரையும் நேற்று மாலை கைது செய்தனர். இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றனர். இதனையடுத்து போலீசார் இருவரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று இரவு புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான விஜயை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

click me!