தமிழகத்தில் இன்று 1875 பேருக்கு கொரோனா..! ஒரே நாளில் 1372 பேர் டிஸ்சார்ஜ்.. உச்சபட்ச உயிரிழப்பு

Published : Jun 11, 2020, 06:33 PM IST
தமிழகத்தில் இன்று 1875 பேருக்கு கொரோனா..! ஒரே நாளில் 1372 பேர் டிஸ்சார்ஜ்.. உச்சபட்ச உயிரிழப்பு

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1875 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 38716ஆக அதிகரித்துள்ளது.  

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிவேகமாக பரவிவருகிறது. கொரோனா பரிசோதனைகள், பாதிப்புகள், டிஸ்சார்ஜ் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை வெளியிட்டுவருகிறது.

இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று ஒரே நாளில் 16829 பரிசோதனை செய்யப்பட்டதில், 1875 பேருக்கு தொற்ற் உறுதியானதாக தெரிவித்துள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 38716ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 1407 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 27398ஆக அதிகரித்துள்ளது.

பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருவது ஆறுதலளிக்கும் விஷயம். இன்று ஒரே நாளில் 1372 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். எனவே குணமடைந்தோரின் எண்ணிக்கை20705ஆக அதிகரித்துள்ளது. 

இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே உயிரிழப்பு எண்ணீக்கை 349ஆக அதிகரித்துள்ளது. கடந்த 9ம் தேதி 21 பேர் உயிரிழந்த நிலையில், இன்று அதிகபட்சமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர். 
 

PREV
click me!

Recommended Stories

சென்னையில் அதிர்ச்சி.. காதல் திருமணம் செய்த 9 நாட்களில் மனைவி கொ*லை.. கணவர் விபரீத முடிவு.. நடந்தது என்ன?
காரை முற்றுகையிட்ட அஜிதா... நிற்காமல் சென்ற விஜய் - பனையூர் தவெக அலுவலகத்தில் பரபரப்பு