அசால்ட்டா இருக்காதீங்க..! 18 வயது தமிழக இளைஞருக்கும் கொரோனா..!

By Manikandan S R SFirst Published Mar 26, 2020, 7:25 AM IST
Highlights

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 18 வயது இளைஞர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கிறார். 63 வயது முதியவர் ஒருவர் துபாயில் இருந்து தமிழகம் திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர் தற்போது வாலாஜா அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தபட்டிருக்கிறார்.

உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையிலும் 657பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 12பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது. நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. 


நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு கொண்டுசெல்லப்பட்டு நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 18 வயது இளைஞர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் வைக்கப்பட்டிருக்கிறார். 63 வயது முதியவர் ஒருவர் துபாயில் இருந்து தமிழகம் திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர் தற்போது வாலாஜா அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்த பட்டிருக்கிறார்.

: 3 new positive cases of in TN. 18 Y M contact of 2nd Pt at . 63 Y M Dubai return at GH. 66 Y M contact of Thai nationals at , Perundurai. Pts are in isolation & stable.

— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl)

 

அதே போல 66 வயது முதியவர் ஒருவர் தாய்நாட்டினருடன் பழகியிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெருந்துறை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அரசு ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றி வருகிறது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!