இது ஹாலிடே சீசன் கிடையாது.. காலியான ரோட்டில் விளையாடினால் கடும் நடவடிக்கை.. சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!

By vinoth kumarFirst Published Mar 25, 2020, 4:55 PM IST
Highlights

சென்னை பெருநகர எல்லைக்குள் 10 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன காவல்துறையும் மாநகராட்சி ஊழியர்கள் ஒன்றிணைந்து ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 50 வயதுக்கு மேல் உள்ள போலீசார்கள்  கவனமாக இருக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல் நிலையங்கள் சார்பில் நகரில் தீவிர ரோந்து பணி நடக்கிறது. 

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவையடுத்து மக்கள் வெளியில் நடமாடுவதை குறைத்துக்கொள்ள சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்கள் பேட்டியளித்த சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்;- அத்தியாவசிய பணிக்கு செல்பவர்கள் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். நோய் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் பக்கத்து வீட்டு எதிர் வீட்டில் இருந்தால் கண்டிப்பாக சுகாதாரத் துறைக்கும், காவல்துறைக்கும் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை பெருநகர எல்லைக்குள் 10 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன காவல்துறையும் மாநகராட்சி ஊழியர்கள் ஒன்றிணைந்து ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 50 வயதுக்கு மேல் உள்ள போலீசார்கள்  கவனமாக இருக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல் நிலையங்கள் சார்பில் நகரில் தீவிர ரோந்து பணி நடக்கிறது. வெளியில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். பூந்தமல்லியில் 11 பேர் இறந்ததாக வதந்தி பரப்பி 2 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் வெளியில் நடமாடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். 

சாலைகள்  காலியாக இருப்பதால் பைக் ரேஸ், செல்பி, கிரிக்கெட் ஆடுவது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் ஹாலிடேஸ் சீசன் கிடையாது. இதில் எல்லாரும் பொறுப்பாக இருக்க வேண்டும். இது ஒருத்தரை மட்டும் பாதிப்பு விஷயம் கிடையாது. மக்கள் அனைவருக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும் இதை மாணவர்கள் இளைஞர்கள் புரிந்துகொண்டும். அவர்கள் வீட்டில் உள்ள பெற்றோர்களும் சிறுவர்களுக்கு  அறிவுறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதை மீறி அவர்கள் ஏதாவது செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

click me!