சென்னை ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் வாடிக்கையாளர்களின் பணத்தை திருடிய உ.பி. சிறுவன் - போலீஸ் அதிர்ச்சி

By Velmurugan s  |  First Published Jun 10, 2024, 10:52 AM IST

சென்னையில் நூதன முறையில் வாடிக்கையாளர்களின் பணத்தை திருடிய 15 வயது உ.பி. சிறுவனை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.


சென்னை ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 60 அடி சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் செயல்படுகிறது. மாலை நேரத்தில் பொதுமக்கள் பலர் அந்த ஏ.டி.எம் மில் பணம் எடுக்க சென்றுள்ளனர். இருப்பினும் பணம் வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அவர்களது வங்கி கணக்கில் இருந்து மட்டும் பணம் எடுத்ததாக குறுந்தகவல் மட்டும் வந்துள்ளது. 

10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா: தேதி அறிவித்த தவெக தலைவர் விஜய்!

Tap to resize

Latest Videos

undefined

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வங்கி புகார் எண்ணில் புகார் அளித்தனர். மேலும் பலர் ஏ.டி.எம் மில் பணம் எடுப்பதற்காக காத்திருந்தனர். அப்பொழுது சந்தேகப்படும் படியான  சிறுவன் ஒருவன் ஏ.டி.எம் மெஷினை போலி சாவியால் திறந்து பணம் எடுத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கையில் சிப் போன்று வைத்திருந்து அதை பயன்படுத்தி பணத்தை கொள்ளையடித்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த அங்கிருந்த நபர் ஒருவர், வடமாநில சிறுவன் நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடித்தார். இதனை அடுத்து கையும் களவுமாக பிடித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ரோந்து பணியில் இருந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 15 வயதாகும் அச்சிறுவன் உத்தரபிரதேச மாநலத்தைச் சேர்ந்தவன் என்பதும், மாலை நேரத்தில் அப்பகுதியில் சுற்றி திரிந்த அந்த சிறுவன், ஏ.டி.எம்., மெஷினில் பணம் வெளியே வரும் பகுதியில் அட்டை வைத்து அடைத்திருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

30 நாள் கெடு.! பரந்தூர் மக்களுக்கு அடுத்த ஷாக் கொடுத்த தமிழக அரசு..! 59 எக்டேர் நிலம் கையகப்படுத்த அனுமதி

இதனால் பொதுமக்கள் எடுக்கும் பணம் இயந்திரத்தில் இருந்து வெளியே வரும் முன்பாக இயந்திரத்திற்குள்ளேயே விழுந்துள்ளது. இவ்வாறு இயந்திரத்திற்குள் விழும் பணத்தை கள்ள சாவி கொண்டு சிறிது நேரம் கழித்து சிறுவன் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுவனை கைது செய்த காவல் துறையினர் அவனிடம் இருந்த ஒரு லட்சம் பணம், 10 ஏ.டி.எம் கார்டு மற்றும் சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவ்வபோது ஏ.டி.எம் களில் காவலர்கள் ரோந்து செல்லாததே இந்த கொள்ளை முயற்சிக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

click me!