தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் அதிபட்சமாக 1438 பேருக்கு கொரோனா..! 861 பேர் டிஸ்சார்ஜ்.. 12 பேர் உயிரிழப்பு

Published : Jun 05, 2020, 06:38 PM IST
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் அதிபட்சமாக 1438 பேருக்கு கொரோனா..! 861 பேர் டிஸ்சார்ஜ்.. 12 பேர் உயிரிழப்பு

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 1,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694ஆக அதிகரித்துள்ளது.   

தமிழ்நாட்டில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டிவருகிறது. அதிகமான தொற்று பாதிப்பை கண்டறியும் விதமாக, அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், அதை செய்துள்ளது தமிழக அரசு. தினமும் சராசரியாக 12 ஆயிரம் பரிசோதனைகள் மட்டுமே செய்யப்பட்டுவந்த நிலையில், நேற்று அதிகபட்சமாக 16 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், இன்று 15,692 பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இன்று 15,692 பரிசோதனை செய்யப்பட்டதில், 1,438 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 28,694ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்றும் ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு பதிவாகியுள்ளது. இன்று சென்னையில் 1,116 பேருக்கு தொற்று உறுதியானதால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 19,809ஆக அதிகரித்துள்ளது.

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் மொத்த பாதிப்பு 8,885ஆக உள்ளது. இன்று ஒரேநாளில் 861 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதையடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கை 15,762ஆக அதிகரித்துள்ளது. 12,697 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

தமிழ்நாட்டில் இன்று 12 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 232ஆக அதிகரித்துள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

பொங்கல் பண்டிகை அதுவுமா! மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
சென்னையை சுற்றி பார்க்க சூப்பர் வாய்ப்பு.. 50 ரூபாய் இருந்தால் போதும்.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!