அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே காது கேளாத மாற்றுத் திறனாளி தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நின்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப். இவருக்கு கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றுள்ளது. இந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக திருச்சியில் இருந்து அவரது அண்ணன் விக்னேஷ் என்பவர் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவருக்கு சரியாக செவி திறன் குறைபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு வயிற்று வலி காரணமாக இயற்கை உபாதையை கழிப்பதற்காக அருகிலுள்ள ரயில் தண்டவாள பகுதியை கடந்துள்ளார் அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ரயில் விக்னேஷ் மீது மோதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விக்னேஷ்க்கு காது கேட்கும் தன்மை இல்லாததால் ரயில் வரும் சத்தத்தை அறியாமல் தண்டவாளத்தை கடந்த போது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.
undefined
திருச்சியில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற அதிகாரியை கடித்து கொல்ல முயற்சி - காவல்துறை விசாரணை
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த விருதாச்சலம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்காடு கோடை விழாவில் காட்சிபடுத்தப்பட்ட செல்லப்பிராணிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்