மகளிர் ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.
WPL 2025 Final: DC vs MI: மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸை அணியும் இறுதிப்போட்டியில் இன்று மோதுகின்றன. DC vs MI WPL 2025 இறுதிப் போட்டி மகாராஷ்டிராவில் உள்ல பிராபோர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி (IST) இரவு 8:00 மணிக்குத் தொடங்கும்.
மகளிர் ஐபிஎல் இறுதிப்போட்டி
ஏற்கெனவே இரு அணிகளுக்கும் இடையே நடந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டெல்லி கேப்பிடல்ஸ் மூன்று பதிப்புகளிலும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது, ஆனால் இதுவரை WPL கோப்பையை வென்றதில்லை. DC ஐந்து முறை வென்று மூன்று முறை தோற்று 10 புள்ளிகளுடன் லீக் கட்டத்தில் முதலிடம் பிடித்ததால் WPL 2025 இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றது.
மும்பை-டெல்லி அணிகள் மோதல்
குஜராத் ஜெயிண்ட்ஸுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வியடைந்த நிலையில் இன்று இறுதிப்போட்டியில் களமிறங்குகிறது. மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸுக்குப் பின்னால் நெட் ரன் ரேட் (NRR) அடிப்படையில் WPL 2025 தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. வியாழக்கிழமை எலிமினேட்டரில் குஜராத் ஜெயிண்ட்ஸை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பிறகு இறுதிப் போட்டிக்கு வருகிறது.
ஷஃபாலி வர்மா ஆதிக்கம்
டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் WPL-ல் ஏழு முறை சந்தித்துள்ளன, இதில் DC 4-3 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த சீசனில் இரு லீக்-ஸ்டேஜ் மோதல்களிலும் கேப்பிடல்ஸ் வென்றது. ஷஃபாலி வர்மா எட்டு போட்டிகளில் 42.85 சராசரியிலும், 157.89 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 300 ரன்கள் எடுத்து அணியின் அதிக ரன் குவித்த வீரராக உள்ளார். ஜெஸ் ஜோனாசென் மற்றும் ஷிகா பாண்டே ஆகியோர் தலா 11 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சு தாக்குதலை வழிநடத்தியுள்ளனர்.
ஐபிஎல் 2025: சிக்சர் மழை பொழிந்து அதிரடியில் கலக்கப்போகும் 6 வீரர்கள்!
ஹேலி மேத்யூஸ்-அமெலியா கெர்
நாட் ஸ்கிவர்-பிரண்ட் 70.42 சராசரியிலும், 156.50 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 493 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரராக உள்ளார். WPL 2025-ல் அதிக ரன் எடுத்தவர் இவர்தான். ஹேலி மேத்யூஸ் மற்றும் அமெலியா கெர் ஆகியோர் MI-ன் பந்துவீச்சு தாக்குதலை வழிநடத்துவார்கள். ஹேலி மேத்யூஸ் 17 விக்கெட்டுகளுடன் தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர், அதே நேரத்தில் அமெலியா கெர் 16 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸ் மகளிர் அணி:
மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெஸ் ஜோனாசென், ஜெமிமா ரோட்ரிக்ஸ், அன்னபெல் சதர்லேண்ட், மரிசான் காப், சாரா பிரைஸ், நிக்கி பிரசாத், மின்னு மணி, ஷிகா பாண்டே, டிடாஸ் சாது, ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, ஆலிஸ் கேப்சி, தானியா பாட்டியா, சினேகா தீப்தி, நந்தினி காஷ்யப், நல்லபுரெட்டி சரணி.
மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), யாஸ்திகா பாட்டியா, ஹேலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர்-பிரண்ட், சஜீவன் சஜனா, அமெலியா கெர், அமன்ஜோத் கவுர், ஜி கமாலினி, சம்ஸ்கிருதி குப்தா, ஷப்னிம் இஸ்மாயில், சாய்கா இஷாக், க்ளோ ட்ரையோன், நடின் டி க்லெர்க், கீர்த்தனா பாலகிருஷ்ணன், ஜிந்திமணி கலிதா, பருணிகா சிசோடியா, அமன்தீப் கவுர், அக்ஷிதா மகேஷ்வரி.
சிஎஸ்கே முதல் கேகேஆர் வரை! 10 ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் யார்? யார்? முழு லிஸ்ட்!