
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53-ஆவது லீக் ஆட்டம் குஜராத் – ஐதராபாத் இடையே கான்பூரில் இன்று நடைபெறுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53-ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத்தும், ஐதரபாத்தும் இன்று மோதிக் கொள்கின்றன.
குஜராத் அணி ஏற்கெனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டதால், இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலையில் ஐதராபாத்தை எதிர்கொள்கிறது.
ஆனால், இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தில் இருக்கும் ஐதராபாத் அணி, குஜராத்தை வீழ்த்தினால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலையில் இருக்கிறது.
ஒருவேளை தோல்வியை தழுவினால் நாளை நடைபெறவுள்ள புணே - பஞ்சாப் அணிகள் இடையிலான ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். அதில் பஞ்சாப் தோற்கும்பட்சத்தில், ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இல்லையெனில் போட்டியிலிருந்து ஐதரபாத் வெளியேற நேரிடும்.
இவ்விரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் மோதினாலும், அவையனைத்திலும் குஜராத் அணிதான் வெற்றிக் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.