
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவருடைய மனைவி பல்வேறு புகார்களை வைத்தார்.
அதன்படி,ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் புகார் இருப்பதாகவும்,அவர் தொடர்ந்து பல ஆபாச சாட் செய்துள்ளதாகவும் அதனை ஸ்க்ரீன் சாட் எடுத்து அப்படியே பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் ஹசின் ஜகாத்.
தற்போது ஒரு குழந்தை இருப்பதால் இதுவரை பொறுமை காத்து வந்ததாகவும்,கொடுமை தாங்க முடியாமல் இருப்பதால் இனி சட்ட ரீதியாக அணுக உள்ளதாகவும் பேட்டியின் போது தெரிவித்து இருந்தார்.
சமி மீது குடும்பத்தினருடன் சேர்ந்து மனைவியை கொடுமைப்படுத்துதல், கொலை முயற்சி, காயப்படுத்துதல்,கற்பழிப்பு,துன்புறுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே வேளையில்,தன்னுடைய மனைவி கொடுத்த எந்த குற்றச்சாட்டுக்கும்,ஷமி எந்த ஒரு கருத்தையும் பதிவு செய்யவில்லை என்பது கூடுதல் தகவல்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.