virat kohli ipl: ipl 2022: எங்கிட்டபோய் யோசனை கேட்கிறீங்களே ! பட்லரைக் கலாய்த்த கோலி

Published : May 21, 2022, 12:46 PM ISTUpdated : May 21, 2022, 04:08 PM IST
virat kohli ipl: ipl 2022:  எங்கிட்டபோய் யோசனை கேட்கிறீங்களே ! பட்லரைக் கலாய்த்த கோலி

சுருக்கம்

virat kohli ipl:  ipl 2022:  என்னிடம் போய் யோசனை கேட்க வந்தீர்களே என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி வீரர் ஜாஸ் பட்லரை ஆர்சிபி முன்னாள் கேப்டன் விராட் கோலி கலாய்த்துள்ளார்.

என்னிடம் போய் யோசனை கேட்க வந்தீர்களே என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி வீரர் ஜாஸ் பட்லரை ஆர்சிபி முன்னாள் கேப்டன் விராட் கோலி கலாய்த்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கட்டாய வெற்றியை நோக்கி ஆர்சிபி அணி களமிறங்கியது. இந்த சீசனில் மோசமாகஆடி வரும் விராட் கோலி, இந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்து மீண்டும் ஃபார்முக்குத் திரும்பினார்.

அதுமட்டுமல்லாமல் ஆர்சிபி அணியையும் வெல்லவைத்து ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளார். 
மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வென்றால்தான் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும் இல்லாவிட்டால், ப்ளே ஆப் சுற்று ஆர்சிபி பக்கம் சென்றுவிடும். ஆதலால், இன்றைய ஆட்டம் பரபரப்பாகியுள்ளது.

இந்த சீசனில் விராட் கோலி மிகவும் மோசமாக ஆடியுள்ளார். இதுவரை 14 போட்டிகளில் ஆடிய கோலி 2 அரைசதம் உள்ளிட்ட 236 ரன்கள்தான் சேர்த்துள்ளார்.

இதனிடைய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பாக, இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர், விராட் கோலியிடம் வந்து பேட்டிங் ஆலோசனை கேட்டுள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் ஜாஸ் பட்லர் 3 சதங்கள், 3 அரைசதங்கள் உள்ளிட்ட 627 ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பி பெற்றுள்ளார். இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நிகழ்ச்சியில், ஹர்பஜன் சிங் நடத்தும் நிகழ்ச்சியில் விராட் கோலி பங்கேற்றார். 

அதில் அவர் பேசுகையில் “ ராஜஸ்தான் ராயல்ஸ் அணி போட்டிக்குப்பின், ஜாஸ் பட்லர் என்னிடம் வந்து பேட்டிங் ஆலோசனை கேட்டார். நான் அவரிடம், நான் உங்களிடம் சில விஷயங்களைக் கேட்க வேண்டும்.

நீங்கள்தான் ஆஞ்சு தொப்பி வைத்திருக்கிறீர்கள், அதிகமான ரன்களை ஸ்கோர் செய்துள்ளீர்கள். என்னிடம் என்ன ஆலோசனை கேட்கப் போகிறீர்கள்.  நான் இந்த ஐபிஎல் சீசனில் ரன்கள் போதுமான அளவில் அடிக்கவில்லையே. இதைக் கேட்டவுடன் நாங்கள் இருவரும் சிரித்துவிட்டோம்” எனத் தெரிவித்தார்.


 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SL Test: படிக்கல், ஜுரல் அசத்தல் சதம்! ரன்மலையைக் குவித்த இந்தியா
TNPL: மல்லுகட்டிய நெல்லை… கெத்து காட்டிய மதுரை!