
இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை ஒட்டி அடுத்த மாதம் இந்திய, இலங்கை, வங்கதேச அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நடக்க இருக்கிறது.
இந்த தொடரில் கேப்டன் கோலி, தோனி, பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். ரோஹித் சர்மா தலைமையிலான இளம் இந்திய அணி, முத்தரப்பு தொடரில் ஆடுகிறது. இந்த தொடரில் ஆல்ரவுண்டர் பாண்டியாவுக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து பாண்டியாவுடன் விஜய் சங்கர் ஒப்பிட்டு பேசப்பட்டார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விஜய் சங்கர், எந்த வீரருடனும் நான் ஒப்பிடப்படுவதை விரும்பவில்லை. ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு வகையில் ஸ்பெஷல். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என நினைக்கிறேன். இலங்கை தொடரில் விளையாடும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். சமீபத்தில் நடந்த உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியது எனக்கு நம்பிக்கை அளிக்கிறது என விஜய் சங்கர் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.