என்னது.. நான் செத்துட்டேனா..? பதறி அடித்து வீடியோ போட்ட கிரிக்கெட் வீரர்..!

First Published Nov 30, 2017, 3:17 PM IST
Highlights
umar akmal tweet as he is alive


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் இறந்துவிட்டதாக தகவல் பரவியதை அடுத்து, தான் நலமாக இருப்பதாக வீடியோ ஒன்றை உமர் அக்மல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில், அரசுக்கு எதிராக சில இயக்கங்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளன. வன்முறை சம்பவங்களை தடுக்க ராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டோர் இறந்ததாகக் கூறப்படுகிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சென்ற உமர் அக்மல், கலவரத்தில் இறந்ததாக தகவல் பரவியது.

உமர் அக்மல் இறந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாக பரவியது. இந்த தகவல், பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே மட்டுமல்லாமல், மற்ற நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 2 நாட்களாக இந்த செய்தி வைரலாக பரவியது.

இந்நிலையில், தனது இறப்பு தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உமர் அக்மல் தான் நலமாக இருப்பதாக பேசி வீடியோ ஒன்றை அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="und" dir="ltr"><a href="https://t.co/rmhfTOjE4N">pic.twitter.com/rmhfTOjE4N</a></p>&mdash; Umar Akmal (@Umar96Akmal) <a href="https://twitter.com/Umar96Akmal/status/935496957161820160?ref_src=twsrc%5Etfw">November 28, 2017</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

அந்த பதிவில், தான் நலமாக இருப்பதாகவும் இறந்துவிட்டதாக 2 நாட்களாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பொய்யானது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உமர் அக்மல் இறந்துவிட்டதாக பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 

click me!