
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 20-வது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணி வீழ்த்தியது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 20-வது ஆட்டம் திருநெல்வேலியில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த காரைக்குடி அணியில் விஷால் வைத்யா 41 ஓட்டங்கள், எஸ்.பத்ரிநாத் 26 ஓட்டங்கள், ஷாஜன் 20 ஓட்டங்கள் சேர்த்தனர்.
காரைக்குடி காளை அணி ஆட்டத்தின் இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்கள் குவித்தது.
திண்டுக்கல் தரப்பில் விக்டர், சஞ்சய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 151 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்களில் 143 ஓட்டங்களீள் ஆல்-அவுட் ஆனது. இதனால் காரைக்குடி காளை அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சுப்பிரமணிய சிவா 17 ஓட்டத்திலும், ஜெகதீசன் 14 ஓட்டத்திலும், அஸ்வின் வெங்கட்ராமன் 3 ஓட்டத்திலும், கங்கா ஸ்ரீதர் ராஜூ 27 ஓட்டத்திலும், வில்கின்ஸ் விக்டர் 8 ஓட்டத்திலும், சன்னிகுமார் சிங் 3 ஓட்டத்திலும், விவேக் 32 ஓட்டத்திலும், ஆதித்யா அருண் 14 ஓட்டத்திலும், கிஷன் குமார் 14 ஓட்டத்திலும், சஞ்சய் ஒரு ஓட்டத்திலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
காரைக்குடி அணி தரப்பில் மோகன் பிரசாத் 4 விக்கெட்டும், கணபதி 2 விக்கெட்டும், சோனு யாதவ், ராஜ்குமார், சுரேஷ்பாபு தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.