டிஎன்பிஎல் அப்டேட்: சேப்பாக் – கோவை அணிகள் இரண்டாவது தகுதிச் சுற்றில் இன்று மோதல்..

First Published Aug 18, 2017, 9:29 AM IST
Highlights
TNPL update chepauk - Coimbatore teams meet today in second qualifying round


திருநெல்வேலியில் இன்று நடைபெறும் இரண்டாவது தகுதிச் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், கோவை கிங்ஸ் அணியும் களம் காணுகின்றன.

திருநெல்வேலியில் இன்று நடைபெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 2-வது தகுதிச் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், கோவை கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

தமிழ்நாடு பிரீமியர் லீக் லீக் சுற்றில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கோவை அணியை சூப்பர் கில்லீஸ் ஏற்கனவே வீழ்த்தியிருக்கிறது. இந்த ஆட்டத்திலும் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றிப் பெற்றால், 2-வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய பெருமையைப் பெறும்.

சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் கோபிநாத், அந்தோணி தாஸ், தலைவன் சற்குணம், சசிதேவ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். பந்துவீச்சைப் பொறுத்தவரையில் சாய் கிஷோர், அலெக்சாண்டர் உள்ளிட்டோரை நம்பியுள்ளது சூப்பர் கில்லீஸ்.

அதேநேரத்தில் கோவை அணி முரளி விஜயின் வருகைக்குப் பிறகு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. கடைசி மூன்று ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.

இதுதவிர வெளியேற்றும் சுற்றில் காரைக்குடி அணிக்கு எதிராக 194 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை எட்டியுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் விஜய், சூர்யபிரகாஷ், அனிருத் சீதா ராம், விக்கெட் கீப்பர் ரோஹித் உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கும், கோவை கிங்ஸ் அணிக்கும் இடையேயான இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

tags
click me!