
மாட்ரிட்,
தனது ஒப்பந்தத்தை நீட்டித்த ரொனால்டோ 2021 வரை ரியல் மாட்ரிட் கிளப்பில் தொடருவார்.
உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த அவர் 2009–ம் ஆண்டு முதல் ஸ்பெயினைச் சேர்ந்த முன்னணி கிளப்பான ரியல் மாட்ரிட் அணியில் விளையாடி வருகிறார்.
சர்வதேச கால்பந்து சங்கத்தின் சிறந்த வீரர் விருதை 3 முறையும், ஐரோப்பிய கால்பந்து அமைப்பின் சிறந்த வீரர் விருதை 4 முறையும் பெற்றுள்ளார்.
கோல்கள் அடிப்பதில் வல்லவரான 31 வயது கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரியல் மாட்ரிட் கிளப்புடனான தனது ஒப்பந்தத்தை திங்கள்கிழமை நீட்டிப்பு செய்து இருக்கிறார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கும் அவர் 2021–ம் ஆண்டு ஜூன் மாதம் வரை அதே கிளப்பில் தொடருவார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஒப்பந்த தொகை வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் அவர் ஒரு வார ஊதியமாக சுமார் ரூ. 3 கோடி பெறுவார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிக சம்பளம் பெறும் கால்பந்து வீரர் என்று கூறப்படுகிறது.
சர்வதேச மற்றும் கிளப் போட்டிகளில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 500 கோல்கள் அடித்து இருக்கிறார்.
‘ஒப்பந்தத்தை புதுப்பித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ கருத்து தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.