ஜுவென்டஸ் அணியின் பிரபல கால்பந்து வீரரின் கடைசி ஆட்டம் இன்று... மிஸ் பண்ணாதீங்க...

Asianet News Tamil  
Published : May 19, 2018, 12:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
ஜுவென்டஸ் அணியின் பிரபல கால்பந்து வீரரின் கடைசி ஆட்டம் இன்று... மிஸ் பண்ணாதீங்க...

சுருக்கம்

The last football player of the Juventus team is today ...

ஜுவென்டஸ் அணியில் 17 ஆண்டுகள் கலந்து கொண்டு விளையாடியதற்கு பிறகு பிரபல கால்பந்து வீரரும், கோல் கீப்பருமான ஜியான்லுகி பஃபான் இன்று விடைபெறுகிறார்.

சிறந்த கோல்கீப்பர்களில் ஒருவராக கருதப்படும் பஃபான் (40) ஜுவென்டஸ் அணியின் கேப்டனாக உள்ளார். இத்தாலி நாட்டின் தேசிய கால்பந்து அணிக்காக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார். ஜுவென்டஸ் அணி அண்மையில் சீரி ஏ கால்பந்து பட்டம் வெல்லவும் பஃபான் உறுதுணையாக இருந்தார்.

பர்மா அணியில் கடந்த 1995-இல் இடம் பெற்ற பஃபான், 2001-இல் ஜுவென்டஸ் அணிக்கு இடம் மாறினார். இத்தாலி அணியின் சார்பில் 2006 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்று கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தார். 

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதி ஆட்டத்தில் 3 முறை பங்கேற்று விளையாடியவர் பஃபான். சனிக்கிழமை வெரோனா அணியுடன் மோதும் ஆட்டமே பஃபான் ஜுவென்டஸ் அணியில் இடம் பெறும் கடைசி ஆட்டமாகும். 

இதுதொடர்பாக ஜியான்லுகி பஃபான், "ஓய்வுக்கு பின்னர் மீண்டும் விளையாடுவது குறித்து முடிவு செய்யவில்லை. இங்கிலிஷ் பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக முடிவு எடுக்கவில்லை. எனது நலனைக் கருதி தான் விரைவில் முடிவெடுப்பேன்" என்று அவர் தெரிவித்தார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2 நாளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டி.. ஒரே நாளில் 20 விக்கெட்.. மெல்போர்ன் பிட்ச் கியூரேட்டர் விளக்கம்!
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் வி.வி.எஸ் லட்சுமணன்?.. பிசிசிஐ சொன்ன முக்கிய அப்டேட்!