
இத்தாலி கால்பந்து லீக் பட்டத்தை ஏழாவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது ஜூவென்டஸ் அணி.
இத்தாலியில் ஏ டிவிஷன் கால்பந்து அணிகளுக்கான இத்தாலி கால்பந்து லீக் போட்டிக்கு சீரி ஏ என்பது பெயர். இதற்கு டிம் கோப்பை எனவும் அழைக்கப்படுகிறது.
ரோம் ஒலிம்பிக் விளையாட்டரங்கில் ஜுவென்டஸ் அணிக்கும் - ரோமா அணிக்கும் இடையில் நடைபெற்ற இந்த ஆட்டம் 0-0 என சமனில் முடிவடைந்தது.
இந்த நிலையில் ஜுவென்டஸ் அணி சீரி ஏ பட்டத்தை வென்றது. இப்பட்டத்தை அந்த அணி வெல்வது 7-வது முறையாகும்.
ஏற்கெனவே கடந்த வாரம் 4-0 என்ற கோல் கணக்கில் ஏ சி மிலன் அணியை வீழ்த்தி கோப்பா இத்தாலியா பட்டத்தை ஜூவென்டஸ் அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டி சமனில் முடிவடைந்தபோதிலும், புள்ளிகள் அடிப்படையில் ஜூவென்டஸ் அணி பட்டத்தை வென்றது கூடுதல் தகவல்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.