உலகக் கோப்பையில் பந்து கொண்டு செல்ல தமிழ்நாடு, கர்நாடகா சிறுவர்கள் தேர்வு...

Asianet News Tamil  
Published : Jun 12, 2018, 01:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
உலகக் கோப்பையில் பந்து கொண்டு செல்ல தமிழ்நாடு, கர்நாடகா சிறுவர்கள் தேர்வு...

சுருக்கம்

Tamil Nadu Karnataka boys to take the ball in the World Cup

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிகாரப்பூர்வமாக பந்து கொண்டு செல்பவர்களாக தமிழ்நாடு, கர்நாடகாவை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடக்கவுள்ளது. இந்தியாவின் கியா மோட்டார்ஸ் நிறுவனம், பிஃபாவின் அதிகாரப்பூர்வ பங்குதாரராக உலகக் கோப்பையில் இடம் பெற்றுள்ளது. 

கால்பந்து ஆட்டங்களில் சிறுவர்களே பந்துகளை கொண்டுச் சென்று வழங்குவது வழக்கம்.  இந்த நிலையில் 10 முதல் 14 வயதுள்ள 1600 சிறுவர்கள் இதற்கான தகுதிச் சுற்றில் இடம் பெற்றனர். 

குர்கானில் கடந்த மாதம் நடந்த தேர்வுப் போட்டியில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி இறுதியாக தேர்வு செய்யப்பட்ட 50 சிறுவர்களில் இருந்து இருவரை பேரை தேர்வு செய்தார்.

அதன்படி கர்நாடகத்தைச் சேர்ந்த 10 வயது ரிஷி தேஜ், தமிழகத்தைச் சேர்ந்த 11 வயது நத்தானியா ஜான் ஆகியோர் இதற்காக ரஷியா செல்கின்றனர். 

பிரேசில் - கோஸ்டா ரிகா மற்றும் பனாமா - பெல்ஜியம் அணிகள் இடையே நடைபெறும் ஆட்டங்களில் இச்சிறுவர்கள் பந்தை கொண்டுசெல்வர்.

உலகம் முழுவதும் இருந்து 64 பள்ளிச் சிறுவர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
Boxing Day Test: முதல் நாளில் சாய்ந்த 20 விக்கெட்டுகள்! ஆஸி., இங்கிலாந்து பௌலர்கள் வெறித்தனம்