சென்னையில் நடந்து வரும் ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 5 ஆம் தேதி சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் 4ஆவது சீசன் தொடங்கியது. இதில், லுகா நார்டி, சுமித் நாகல், டாலிபோர் ஸ்விரினா, உகோ பிளான்செட், ஸ்டெபனோ நபோலிடானோ, ராம்குமார் ராமநாதன், முகுந்த் சசிகுமார் ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட டேரில் மிட்செல் – ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்?
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2ஆவது சுற்று போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் 7-5, 6-2 என்ற நேர்செட் கணக்கில் இத்தாலியைச் சேர்ந்த ஸ்டெபனோ நபோலிடானோவை வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதற்கு முன்னதாக கடந்த மாதம் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் 2024 தொடரில் சுமித் நாகல் 2ஆவது சுற்றில் தரவரிசையில் ஏ சீடேடு அந்தஸ்து பெற்ற ஒரு வீரரை வீழ்த்தி 3ஆவது சுற்றுக்கு முன்னேறி 35 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக டென்னிஸ் வரலாற்றில் சாதனை படைத்தார்.
இதே போன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மற்றொரு போட்டியில் இத்தாலியைச் சேர்ந்த லுகா நார்டி 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெர்னார்ட் டாமிக்கை வீழ்த்தினார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார்- சகெத் மைனெனி ஜோடி 7-6 (3), 6-4 என்ற நேர் செட்டில் சீன தைபே மற்றும் போலந்து ஜோடியான ராய் ஹோ – மாதுஸ்சிவ்ஸ்கியை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.