கோலிக்கு இதவிட வேற என்ன பெருமை வேணும்..?

Published : Nov 17, 2018, 11:25 AM IST
கோலிக்கு இதவிட வேற என்ன பெருமை வேணும்..?

சுருக்கம்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், விராட் கோலியை இருபெரும் ஜாம்பவான்களுடன் ஒப்பிட்டு புகழ்ந்துள்ளார். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்து கொண்டிருக்கிறார். 

ஒருநாள் போட்டிகளில் 38 சதங்கள் விளாசியுள்ள கோலி, 62 சர்வதேச சதங்களுடன், சச்சின், பாண்டிங், சங்ககராவிற்கு அடுத்து 4வது இடத்தில் உள்ளார் கோலி. 782 இன்னிங்ஸ்களில் ஆடி 100 சர்வதேச சதங்களை விளாசியுள்ள சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். ஆனால் கோலி வெறும் 388 இன்னிங்ஸ்களில் 62 சதங்களை விளாசியுள்ளார். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை விரைவில் வீரராகவும் கோலி திகழ்கிறார். 

சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள், அதிக சதங்கள் ஆகிய சாதனைகளை கோலி விரைவில் முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கில் இருக்கும் பெரும்பாலான சாதனைகளை கோலி முறியடித்துவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழ்ந்துவருகிறார் கோலி. ஆனால் அவ்வப்போது வாயை கொடுத்து சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறார். அண்மையில் கூட, இந்திய வீரர்களை விட வெளிநாட்டு வீரர்களின் ஆட்டத்தை அதிகம் விரும்பி ரசிப்பதாக கூறிய ரசிகரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு கூறி சர்ச்சையில் சிக்கினார். 

சர்ச்சைகளில் சிக்கினாலும் கேப்டன்சியில் குறைபாடுகள் இருந்தாலும், அவரது பேட்டிங் திறனை மட்டும் யாராலும் குறைசொல்ல முடியாது. சர்வதேச கிரிக்கெட்டில் ரன்களை குவித்துவருவதால் ரன் மெஷின் என அழைக்கப்படுகிறார். 

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், விராட் கோலி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், விராட் கோலி மிகச்சிறந்த வீரர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர் மிகப்பெரிய வெற்றியை பெறுவதை நேசிக்கிறார். அதற்காக சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்துகிறார். கிரிக்கெட்டை மிகவும் நேசித்து ஆடுகிறார் கோலி. சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரயன் லாரா ஆகிய ஜாம்பவான்களை போன்றே விராட் கோலியும் மிகச்சிறந்த வீரர் என்று ஸ்டீவ் வாக் புகழ்ந்துள்ளார். 

விராட் கோலியை சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரயன் லாரா ஆகிய ஜாம்பவான்களுடன் ஸ்டீவ் வாக் ஒப்பிட்டுள்ளார். இதைவிட அவருக்கு பெரிய பெருமை தேவையில்லை. 
 

PREV
click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து