முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - இலங்கையை வீழ்த்தியது இந்தியா...!!

Asianet News Tamil  
Published : Jul 29, 2017, 04:51 PM ISTUpdated : Sep 19, 2018, 12:57 AM IST
முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - இலங்கையை வீழ்த்தியது இந்தியா...!!

சுருக்கம்

srilanka defeated by indian team

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 600 ரன்களைகுவித்தது.

இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பிரதீப் அதிகபட்சமாக 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர், கலமிறங்கிய இலங்கை அணி 291 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதையடுத்து இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நான்காம் நாளான இன்று ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி240 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து இறங்கிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இன்றைய ஆட்ட நேர முடிவில் 245 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இலங்கை அணி இழந்தது.

இதனால் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்து வருகிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ப்பா.. என்னா அடி.. சர்ஃபராஸ் கானை சிஎஸ்கே பிளேயிங் லெவனில் சேர்க்கணும்.. ஜாம்பவான் சப்போர்ட்!
டி20 உலகக் கோப்பையில் பெரிய அணிகளை பந்தாட ஆப்கானிஸ்தான் ரெடி.. ஸ்டிராங் டீம்.. அட! கேப்டன் இவரா?