இரண்டாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி பழி தீர்த்தது இலங்கை…

Asianet News Tamil  
Published : Jul 03, 2017, 09:40 AM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
இரண்டாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி பழி தீர்த்தது இலங்கை…

சுருக்கம்

Sri Lanka defeated Zimbabwe in the second match

ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று முதல் ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்தது இலங்கை.

ஜிம்பாப்வே – இலங்கை அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் இலங்கையின் காலே நகரில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வுச் செய்தது. இதனையடுத்து ஜிம்பாப்வே அணி பேட் செய்தது.

இலங்கையின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 33.4 ஓவர்களில் 155 ஓட்டங்களுக்குச் சுருண்டது ஜிம்பாப்வே. அந்த அணியின் அதிகபட்சமாக மஸகட்ஸா 41 ஓட்டங்களையும், வாலர் 38 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இலங்கைத் தரப்பில் சன்டாகன் 4 விக்கெட்டுகளையும், டி சில்வா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் இலங்கை அணி பேட் செய்தது. அந்த அணி 30.1 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கான 158 ஓட்டங்களை எடுத்து வெற்றிக் கண்டது.

உபுல் தரங்கா 75 ஓட்டங்களையும், கேப்டன் ஏஞ்செலோ மேத்யூஸ் 28 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஜிம்பாப்வே தரப்பில் சதாரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கையின் டி சில்வா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஐந்துப் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

கடந்த போட்டியில் ஜிம்பாப்வேயிடம் தோல்விகண்ட இலங்கை இந்த ஆட்டத்தில் வெற்றிப் பெற்றதன் மூலம் பழிக்குப் பழி வாங்கி சமமான போட்டியை வெளிப்படுத்தியது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

இந்தியாவின் டாப் 5 ஸ்பின்னர்கள் யார் யார் தெரியுமா? முழு லிஸ்ட் இதோ!
CSK vs DC: வேஸ்ட் லக்கேஜ்.. இளம் வீரர் நீக்கம்.. 'சிக்சர்' மன்னன் உள்ளே.. சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதோ!