இப்படி ஒரு பவுலிங்கை பார்த்துருக்கீங்களா..? அம்பயரே அரண்டு போயிட்டாரு!! வீரர்கள் அதிர்ச்சி

By karthikeyan VFirst Published Nov 9, 2018, 10:34 AM IST
Highlights

சிகே நாயுடு டிராபி தொடரின் ஒரு போட்டியில் உத்தர பிரதேச வீரர் வித்தியாசமான முறையில் வீசிய பந்தை அம்பயர் செல்லாது என்று அறிவித்துவிட்டார். 
 

சிகே நாயுடு டிராபி தொடரின் ஒரு போட்டியில் உத்தர பிரதேச வீரர் வித்தியாசமான முறையில் வீசிய பந்தை அம்பயர் செல்லாது என்று அறிவித்துவிட்டார். 

சிகே நாயுடு டிராபி தொடரில் மேற்கு வங்கத்திற்கு எதிரான போட்டியில் உத்தர பிரதேச அணியை சேர்ந்த சிவா சிங் என்ற ஸ்பின் பவுலர் 360 டிகிரி சுழன்று பந்துவீசினார். அந்த பந்தை பேட்ஸ்மேன் அடித்துவிட்டார். எனினும் பவுலர் 360 டிகிரி சுழன்று வித்தியாசமான முறையில் பந்தை வீசியதால் அந்த பந்தை அம்பயர் செல்லாது என அறிவித்துவிட்டார். 

இந்த வீடியோவை முன்னாள் வீரர் பிஷன் பேடி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், அம்பயர் அந்த பந்தை செல்லாது என்று அறிவித்தது சரியா தவறா என்று விவாதம் நடத்திவருகின்றனர். பேட்ஸ்மேன்கள் பல வகையான வித்தியாசமான ஷாட்களை அடிக்கும்போது பவுலர்கள் ஏன் வித்தியாசமாக பந்துவீசக்கூடாது என்றும் அதேபோல பேட்ஸ்மேனின் கவனத்தை சிதறடிக்கும் விதமாக பந்துவீசியதாகவும் பல கருத்துகள் பதிவிடப்பட்டு விவாதம் நடந்துவருகிறது. 

Weirdo...!! Have a close look..!! pic.twitter.com/jK6ChzyH2T

— Bishan Bedi (@BishanBedi)
click me!