விரைவில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பெயர் மாறப்போகுது - விளையாட்டு துறை மந்திரி அதிரடி...

Asianet News Tamil  
Published : Nov 25, 2017, 09:52 AM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
விரைவில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பெயர் மாறப்போகுது - விளையாட்டு துறை மந்திரி அதிரடி...

சுருக்கம்

Soon the name of the Sports Authority of India is changing - Sports Ministerial Action ...

விரைவில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பெயர் மாற்ற்ப்படும் என்று மத்திய விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரதோர் தெரிவித்தார்.

மத்திய விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரதோர் டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில், "இந்திய விளையாட்டு ஆணையத்தின் (ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா) பெயர் மாற்றம் செய்யப்படும். ஆணையம் என்ற பெயருக்கு விளையாட்டில் இடமில்லை. விளையாட்டு என்பது சேவையாகும்.

இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு ஒதுக்கப்படும் நிதி விளையாட்டு அல்லாத பணிகளுக்கும் திருப்பி விடப்படுகிறது. இனிமேல் இதுபோன்ற வேலைகளுக்கு வெளிநபர்கள் பயன்படுத்தப்படுவார்கள்.  விளையாட்டு திறனை வளர்ப்பதில் மட்டுமே இந்திய விளையாட்டு ஆணையம் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்தாண்டு பள்ளிகளில் இளம் வீரர்களை அடையாளம் காணும் திட்டம் செயல்படுத்தப்படும். 8 முதல் 18 வயதிலான சிறந்த வீரர்–வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சியும், படிப்பு வசதியும் அளிக்கப்படும்.

விளையாட்டு துறை தொழில்முறையில் கையாளப்படும். விளையாட்டு வீரர்களுக்கு குறைந்தபட்சமாக வேலைவாய்ப்பில் வழங்க வேண்டிய இடஒதுக்கீட்டுக்கான அளவு கோல் நிர்ணயிக்கப்படும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
Boxing Day Test: முதல் நாளில் சாய்ந்த 20 விக்கெட்டுகள்! ஆஸி., இங்கிலாந்து பௌலர்கள் வெறித்தனம்