
ஆசிய பாட்மிண்டன் சாம்பியன் போட்டிகளில் பிரபல இந்திய பாட்மிண்டன் வீரர்களான பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
ஆசியா பாட்மிண்டன் சாம்பியன் போட்டிகள் சீனாவின் ஊஹான் நகரில் வரும் 24-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான குலுக்கல் ஜாகர்த்தாவில் நடைபெற்றது.
ஆசிய பாட்மிண்டன் சாம்பியன் போட்டிகளில் பங்கேற்கும் பிரபல இந்திய பாட்மிண்டன் வீரர்களான பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு தொடக்கச் சுற்று ஆட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தற்போது காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்றுள்ள பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் இப்போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
சிந்து முதல் சுற்றில் தைவானின் பை யு போவையும், ஸ்ரீகாந்த் தனக்கு எதிரான முதல் சுற்றில் ஜப்பானின் கென்ட் நிஷிமோட்டோவையும் சந்திக்கின்றனர்.
மற்ற இந்திய வீரர்களான எச்.எஸ்.பிரணாய், சாய் பிரணீத், சாய்னா நேவால், இரட்டையர் பிரிவில் அர்ஜுன், ராமச்சந்திரன், மனு அட்ரி, சுமீத் ரெட்டி ஆகியோரும், பெண்கள் இரட்டையர் பிரிவில் மேக்னா, பூர்விஷா, அபர்ணா பாலன், ஸ்ருதி இணைகள் பங்கேற்கின்றன.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.