முதல் சுற்றை 31 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டுவந்தார் சிந்து; அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்…

First Published Apr 27, 2017, 10:59 AM IST
Highlights
Sindhu ended the first round in 31 minutes Progress to the next round


ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து அயுஸ்டினை வீழ்த்தி 31 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது.

இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஒன்றில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து, இந்தோனேஷியாவின் தினார் தயா அயுஸ்டினுடம் மோதினார்.

இந்த ஆட்டத்தில் சிந்து, 21-8, 21-18 என்ற நேர் செட் கணக்கில் 31 நிமிடங்களில் முடிவுக்குக் கொண்டுவந்து வெற்றிப் பெற்றார்.

இதன்மூலம் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார் சிந்து.

ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஒன்றில், உலகின் 13-ஆம் நிலை வீரரும், இந்தியருமான அஜய் ஜெயராம், போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த சீனாவின் ஹெளவெய் தியானை 21-18, 18-21, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

tags
click me!