
மெல்பர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செரினா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்திற்கு அமெரிக்க சகோதரிகளான வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் செரினா வில்லியம்ஸ் தகுதி பெற்றிருந்தனர்.
இப்போட்டியில் செரினா வில்லியம்ஸ் தனது சகோதரி வீனஸ் வில்லியம்சை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
செரினா ஒற்றையர் பிரிவு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வெல்லும் 23 வது பட்டம் இதுவாகும்.
ஏற்கெனவே 22 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் வென்று ஜெர்மனியின் ஸ்டெபிஃகிராபின் சாதனையை சமன் செய்திருந்தார்.
தற்பொழுது ஸ்டெபியை 3வது இடத்திக்கு தள்ளி 2வது இடத்தைப் செரினா பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை Margaret Court 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பெற்று முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.