
இந்த முறை ஐபிஎல் தொடரை எந்த அணி வெல்லும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கணித்துள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டது. அதுவரை மற்ற அணி வீரர்களை எதிரணி வீரர்களாகவே பார்த்து பழக்கப்பட்ட கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாற்று அணியினருடன் வீரர்கள் இணைந்து விளையாடுவதை பார்ப்பது பெரும் ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருந்தது.
2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியதிலிருந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. இதுவரை 10 சீசன்கள் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 11வது சீசன் ஆகும். இதுவரை நடந்துள்ள 10 சீசன்களில், மும்பை அணி அதிகபட்சமாக மூன்று முறை ஐபிஎல் தொடரை வென்றுள்ளது.
ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாப், பெங்களூர், டெல்லி ஆகிய அணிகள் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் தொடரை வென்றதில்லை.
இந்நிலையில், இந்த முறை எந்த அணி ஐபிஎல் தொடரை வெல்லும் என்பது தொடர்பாக முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.