தமிழர்களின் போராட்டத்திற்கு தமிழில் ஆதரவுத் தெரிவித்த சேவாக்…

Asianet News Tamil  
Published : Jan 21, 2017, 12:49 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
தமிழர்களின் போராட்டத்திற்கு தமிழில் ஆதரவுத் தெரிவித்த சேவாக்…

சுருக்கம்

சல்லிக்கட்டுக்கு ஆதரவான தமிழர்கலின் போராட்டத்திற்கு தமிழில் டிவிட் செய்து தனது ஆதரவை இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் கலாசாரப் பாரம்பரியத்துடன் இணைந்த விளையாட்டாக விளங்கும் சல்லிக்கட்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுகிறது. இந்த விளையாட்டுப் போட்டி 5000 ஆண்டுகள் மிகப் பழமையானது. ஆனால், தமிழகத்தில் சல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது.

தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் ல்லிக்கட்டு, எருதுப் போட்டிகள் மூலமாக விலங்குகளை காட்சிப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதையடுத்து சல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுக்க தீவிரமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், இன்று இந்தப் போராட்டத்துக்கு அதரவு தெரிவித்து தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

அவர் கூறியதாவது: “அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன். அமைதியைத் தொடருங்கள். அன்புடன்” என்று சேவாக் டிவிட் செய்துள்ளார்.

சேவாக்கின் இந்தத் தமிழ் ட்வீட் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரபடுகிறது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

WTC 2025-27 இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா? 3 முக்கிய விஷயங்கள்
ஆஷஸ் தொடர் 2025-26: ஆஸ்திரேலியாவின் 14 ஆண்டு கால சாதனையை முறியடித்த இங்கிலாந்து