இந்திய அணிக்கு பெருத்த அடி!! அந்த விஷயத்துல நம்மால் ஒண்ணுமே செய்ய முடியாது

By karthikeyan VFirst Published Nov 25, 2018, 10:53 AM IST
Highlights

மெல்போர்னில் நடந்த இரண்டாவது டி20 போட்டியின் குறுக்கே வந்த மழை, விட்டு விட்டு தொடர்ந்து வந்ததால் போட்டி கைவிடப்பட்டது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், 1-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. எனவே நாளை நடக்க உள்ள கடைசி போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும், இன்றைய போட்டியில் வென்று தொடரை சமன்செய்யும் முனைப்பில் இந்திய அணியும் உள்ளன. 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே பிரிஸ்பேனில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த போட்டியின் குறுக்கே மழை வந்ததால் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு இந்திய அணிக்கு 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 17 ஓவர் முடிவில் 169 ரன்கள் எடுத்ததால் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 

எனவே மெல்போர்னில் நடந்த இரண்டாவது போட்டியில் வெல்லும் முனைப்பில் அபாரமாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி சுருட்டியது. 19 ஓவருக்கு அந்த அணி 132 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை வந்தது. அத்துடன் போட்டி நிறுத்தப்பட்டு, டக்வொர்த் முறைப்படி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இரண்டு முறை போட்டி மீண்டும் தொடங்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால் மழை விட்டு விட்டு மீண்டும் மீண்டும் வந்ததால் போட்டி கைவிடப்பட்டது. இந்திய அணி எளிதாக வென்றிருக்க வேண்டிய போட்டி கைவிடப்பட்டதால் இந்திய அணியின் வெற்றி பாதிக்கப்பட்டது.

அதனால் இன்று நடக்கும் கடைசி போட்டியில் வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன. இந்நிலையில், இரண்டாவது போட்டி கைவிடப்பட்டது குறித்து பேசிய முன்னாள் கேப்டன் கங்குலி, இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு. இந்த போட்டி முழுவதுமாக ஆடப்பட்டிருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். ஆனால் காலநிலை நமது கையில் இல்லை. நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. மழையை நம்மால் கட்டுப்படுத்த முடியாது என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

இன்றைய போட்டியில் வெற்றி பெறும் தீவிரத்தில் இந்திய அணி உள்ளது.
 

click me!